பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

தம்புள்ளை காளி கோயிலின் விக்கிரகத்தை உடைத்தெறிந்த பிக்குகள்
தம்புள்ளையில் உள்ள காளி கோயிலின் மூலவிக்கிரகம் நேற்று இரவு பௌத்த அடிப்படைவாதிகளால் எடுத்துச் செல்லப்பட்டு உடைத்தெறியப்பட்டுள்ளது.உடைக்கப்பட்ட விக்கிரமகத்தின் பாகங்கள் வேறு இடம் ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குறித்த கோயில் மற்றும் அருகில் உள்ள பள்ளிவாசல் ஆகியவற்றை அகற்றவேண்டும் என்று அங்குள்ள பௌத்த விஹாராதிபதி தொடர்ந்தும் அச்சுறுத்தல் விடுத்து வந்துள்ளார் இதனையடுத்து குறித்த கோயில் நிர்வாகத்தினர் எதிர்வரும் 15ம் திகதி வரை தமக்கு அவகாசம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத பௌத்த அடிப்படைவாதிகள் நேற்று இரவு விக்கிரகத்தை எடுத்து சென்று உடைத்துள்ளனர்.
ஏற்கனவே தம்புள்ளையில் உள்ள அம்மன் கோயிலும் பாதை சீரமைப்பின் நிமித்தம் அகற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் கோயிலுக்கு அருகில் உள்ள பள்ளிவாசலையும் அகற்றுமாறு தம்புள்ள விஹாராதிபதி அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக பள்ளிவாசல் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.