பக்கங்கள்

பக்கங்கள்

26 செப்., 2013

சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் திருமண சேவைகள்

சுவிஸ் ஒபெர்லாந்து மக்களின் ஒரேயொரு சைவ வழிபாட்டு தலமாக விளங்கும் தூண் வரசித்தி விநாயகர் ஆலய ஆன்மீக சமூக சேவை பணிகளில் திருமண சேவைகளும் சிறந்த பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளன.அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இந்த ஆலயத்தில் நடாத்தப் படும் திருமண ஏற்பாடுகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறுகிய  கால அவகாசம்,எளிய முறையிலான
ஏற்பாடுகள்,ஆலய நிர்வாகத்தினரின்வேலைப் பளு குறைப்பு , சகல விதமான ஒழுங்குகள் போன்ற நடைமுறைகளினால் மக்களிடையே நல்லாதர்வினைப் பெற்றுள்ளது திருமண ஏற்பாட்டினை நிகழ்த்த விரும்புவோர் கால நேரத்தை குறித்து ஆலய நிர்வாகத்தோடு தொடர்பினை பேணும் இடத்து நிர்வாகமே  எல்லாவித ஒழுங்குகளையும்  தாமாகவே புரிகின்ற பாங்கு சிறப்பானது .அத்தோடு ஒட்டு மொத்தமான பொருளாதார ரீதியிலான நியாயமான செலவே திருப்தியானதாக உள்ளதாக இதுவரை திருமணத்தை இங்கே நடாத்திய ஒன்பது குடும்பங்கள் மெச்சி பாராட்டுவது கவனிக்க வேண்டியதுஆகும் அண்மையில் புரட்டாதி பதினைந்தில்   திருநெல்வேலியை சேர்ந்த ரா.குகராசன் அவர்களுக்கும்  வவுனியாவைச் சேர்ந்த தா.கமலாம்பிகை அவர்களுக்கும் இனிய திருமண பந்தத்தினை சிவஸ்ரீ பாலகிருஷ்ணா குமாரக்  குருக்கள் அவர்களோடு ஒன்றிணைந்து ஆலய  ஸ்தாபகரான சு.வடிவேலு  அவர்கள் நிகழ்த்தி வைத்த சிறப்பு அனைவரையும் உள்ளம் உவக்க வைத்தது அண்மையி ல் இந்த ஆலயத்துக்கு ஒன்பதாவது சத்குரு ஸ்ரீ சரவணபவா சுவாமிகள் விஜயம் செய்து ஆசி வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது / அந்த காட்சிகளை இங்கே காணலாம்