பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை இடைநிறுத்தியது சுவிஸ் 
 புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட தமிழர்களை இலங்கைக்கு நாடுகடத்துவதை, சுவிஸ் அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட இரண்டு தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளதை அடுத்தே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. 
 
இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, சுவிஸ் சமஸ்டி குடியேற்ற பணியகம் தெரிவித்துள்ளது. 
 
கைது செய்யப்பட்டுள்ள இரண்டு தமிழர்களின் நிலை குறித்து அறிந்து கொள்ளும் முயற்சியில் கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகம் ஈடுபட்டுள்ளதாகவும், சுவிஸ் ஊடகச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.