பக்கங்கள்

பக்கங்கள்

12 செப்., 2013

இ.தொ.காவை சேர்ந்த 18 பேர் ஐ.தே.கட்சியில் இணைந்தனர்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 18 பிரதேச தொழிற்சங்க தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் இருந்து இவர்கள் கட்சியின் அங்கத்துவ அட்டைகளை பெற்றுக்கொண்டனர்.
கட்சியின் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த அலுவிகாரவின் வீட்டில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் 18 பேரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் தெரிவித்தார்.
தம்புள்ளையில் காளி கோயிலில் சிலை உடைக்கப்பட்டு கிணற்றில் போட்டிருந்ததாகவும் அந்த சம்பவம் தொடர்பில் ஆராய இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த எவரும் அங்கு செல்லவில்லை எனவும் தான் நுவரெலியாவில் இருந்து தம்புள்ளைக்கு சென்று சம்பவம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.