பக்கங்கள்

பக்கங்கள்

18 செப்., 2013

பள்ளிகளை உடைத்த அரசுக்கு வாக்களிக்காதீர்கள்: முஸ்லீம்களிடம் மொகமட் இலியாஸ் கோரிக்கை
பள்ளிவாசல்களை உடைப்பவர்களுக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் அவரது சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் ஆசீர்வாதம் வழங்குகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் டாக்டர் மொகமட் இலியாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்திற்கு முஸ்லீம் மக்கள் ஆதரவு வழங்க கூடாது என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று வரையில் 24 பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சில பள்ளி வாசல்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. முதன்முதலாக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தம்புள்ள பள்ளிவாசல் அமைந்திருந்த இடத்தில், பள்ளி வாசலுக்கு குறுக்காக இன்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வீதியொன்று அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசல்கள் உடைக்கப்படுவதற்கு எதிராக குரல் எழுப்பிய அசாத் சாலி கைது செய்யப்பட்டார். ஆனால் பள்ளி வாசல்களை உடைப்பவர்கள் இன்னமும் கைது செய்யப்படவில்லை.
முஸ்லீம்களுக்கு எதிரான இந்த அரசாங்கத்தை விரட்டுவதற்காக ஒவ்வொரு முஸ்லீமும் அரசாங்கத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றார்