பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2013

பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம்: அத்வானி புறக்கணிப்பு
பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கலந்து கொள்ளவில்லை. 


குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடியை, எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜக பிரதமர் வேட்பாளராக முன்நிறுத்த அக்கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் முயற்சி மேற்கொண்டு வருகிறார். அதற்கான ஆதரவினை திரட்டி வருகிறார். கட்சியின் ஆட்சி மன்றக் குழு கூட்டத்திலேயே இதற்கான அறிவிப்பை வெளியிடவும் அவர் முடிவு செய்திருந்தார்.
பிரதமர் வேட்பாளர் அறிவிப்பு குறித்து 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர் அறிவிக்கலாம் என்று அத்வானி கூறிவந்தார். இந்தநிலையில் பாஜக ஆட்சிமன்றக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை டெல்லியில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அத்வானி கலந்து கொள்ளவில்லை. மோடியை பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே அவர் இந்த கூட்டத்தல் கலந்து கொள்ளவில்லை என்றும், இந்த கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் அத்வானி தனது எதிர்ப்பை வெளிப்படையாக காட்டியுள்ளார் என்றும் டெல்- பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.