பக்கங்கள்

பக்கங்கள்

2 செப்., 2013

தேர்தல் பிரசாரத்திற்கு சமூக விழாக்களை பயன்படுத்தக்கூடாது : தேர்தல்கள் ஆணையாளர்

மாகாண சபைத் தேர்தலில் கட்சிகளும், குழுக்களும் விசேடமாக வேட்பாளர்களை ஊக்குவிப்பதற்காக சமய வழிபாட்டு நிலையங்களையும் சமய விழாக்களையும் பயன்படுத்தக்கூடாது.
அதே போன்று கலாசார கல்வி விளையாட்டு விழாக்களின் போதும் வேறு சமூக வைபவங்களின் போதும் அரசியல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடாது என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
ஏதேனுமொரு சமய வழிபாட்டு நிலையமொன்றில் அல்லது வைபவமொன்றின் போதும், அரசாங்க கலாசார கல்வி விளையாட்டு மற்றும் சமூக வைபங்களின் போதும் ஏதேனுமொரு கட்சி, குழு அல்லது வேட்பாளரொருவர் சட்டவிரோதமான முறையில் பிரசார அறிவித்தல்களை காட்சிப்படுத்தல், வாக்கை இரந்து கேட்கும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தல், வாக்கை பெற்றுக் கொள்வதற்கு தூண்டும் வண்ணம் உரைகளை நிகழ்த்துதல் பொருட்களையும், உபகரணங்களையும் பகிர்ந்தளித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.