பக்கங்கள்

பக்கங்கள்

25 செப்., 2013

இலங்கையில் ஐ.நா தோல்வியடைந்து விட்டது: ஒப்புக் கொண்டார் பான் கீ மூன்
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் ஐ.நாடுகள் சபை தோல்வியடைந்து விட்டதாக ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஐ.நா பொதுச்சபையின் 68வது கூட்டத்தொடரில், பொதுவிவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உரையாற்ற முன்பாகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஐ.நாவின் செயற்பாடுகள் தொடர்பான உள்ளக மீளாய்வில், அமைப்பு ரீதியாக ஐ.நா சபை தோல்வியை தழுவியுள்ளது.
குறித்த நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்த ஆதரவை வழங்கவில்லை. அத்துடன் ஐ.நா அமைப்பு பொருத்தமான அல்லது முழுமையான செயற்படவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.