பக்கங்கள்

பக்கங்கள்

9 செப்., 2013

வட மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாட கொழும்பு வாழ் தமிழர்களுக்கு அவசர அழைப்பு
தலைவர்-கே.வீ.தவராசா (தலைவர்.கொழும்பு கிளை.தமிழரசு கட்சி )
காலம்-(11-09-2013 ) புதன்கிழமை மாலை 05.30
இடம்-அக்சயா மண்டபம்,37 வது ஒழுங்கை .வெள்ளவத்தை .கொழும்பு 
சிறப்புரை-எம்.ஏ .சுமந்திர்டன் (பா.உ )

நடைபெறவுள்ள வட மாகாணசபைத் தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுடைய தலைநகர் கொழும்பில் வசிக்கும் - வாக்காளர்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்றை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கலந்துரையாடல் கொழும்புக் கிளையின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா தலைமையில் எதிர்வரும் புதன்கிழமை 11ஆம் திகதி மாலை 5 மணிக்கு கொழும்புவெள்ளவத்தை 37வது ஒழுங்கையில் அமைந்துள்ள அக்‌ஷயா மண்டபத்தில் (செட்டிநாடு உணவக மண்டபத்தில்) நடைபெறவுள்ளது.

இக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ. சுமந்திரன் அவர்கள் பங்குபற்றி சிறப்புரையாற்றுவதுடன் விளக்கங்களையும் அளிக்கவுள்ளார்.

கொழும்பு வாழ் தமிழ் மக்களை இந் நிகழ்வில் தவறாது பங்குபற்றி ஆக்க பூர்வமான கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.