பக்கங்கள்

பக்கங்கள்

3 செப்., 2013

ஆளும் கூட்டணியிலிருந்து விலகப் போவதில்லை! மகிந்தவே எமது அரச தலைவர்: ரவூப் ஹக்கீம்
அரசாங்கத்தையும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவையும் வலுவிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்ற ரீதியில் அந்தப் பொறுப்பிலிருந்து விலகப் போவதில்லை. எவரேனும் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டால் உரிய நேரத்தில் குறித்த தரப்பிற்கு தகுந்த பாடம் புகட்டப்படும்.
அரசாங்கத்துடன் கட்சிக்கு காணப்படும் உறவினை புரிந்துகொள்ளாத சில அமைச்சர்கள், தம்மை ஆளும் கட்சியிலிருந்து விலக்க முயற்சிப்பதாக ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனினும், இந்த முயற்சி வெற்றியளிக்காது. எமது அரச தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌சவே.
அரசாங்கத்தைப் போன்றே ஜனாதிபதியையும் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.