பக்கங்கள்

பக்கங்கள்

13 செப்., 2013

தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் அவுஸ்திரேலியத் தூதுவர் இரகசிய சந்திப்பு
தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவருக்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாண தேர்தல் தொடர்பாக ஆராய்வதெற்கென யாழ்ப்பாணத்திற்கு மூன்று நாள் விஜயமாக வந்திருந்த இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் ரொபின் மூடி யாழ்ப்பாணத்தில் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலருடன் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐ.தே.க குழுவினருடனும் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் இரகசிய சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பில் போது வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக கூட்டமைப்பின் வெற்றி தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.