பக்கங்கள்

பக்கங்கள்

31 அக்., 2013

இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு சிறை!
இரண்டு மகள்களை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு 120 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு மகள்களையும் அடிக்கடி பாலியல் ரீதியான வன்புணர்ந்த தந்தைக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்தத் தண்டனையை விதித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதவான் பேமா ஸ்வர்னாதிபதி இந்தத் தண்டனை விதித்துள்ளார்.
41 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரே இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
ஹொரவப்பொத்தான பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவருக்கு வழங்கப்பட்ட மிகக் கடுமையான தண்டனை இதுவெனக் கருதப்படுகின்றது.
இரண்டு மகள்களுக்கும் நட்டஈடாக தலா பத்து லட்ச ரூபாவையும், அபராதமாக தலா 25000 ரூபாவையும் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நட்டஈடு மற்றும் அபராதப் பணத்தைச் செலுத்தாத காரணத்தினால் மேலும் ஆறு ஆண்டுகள் கூடுதல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மொத்தமாக 126 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தந்தையை வீட்டுக்கு அழைத்துச் செல்ல விருப்பமா என பிள்ளைகளிடம் நீதவான் கோரியதாகவும், அதன் போது விரும்பவில்லை என பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்