பக்கங்கள்

பக்கங்கள்

5 அக்., 2013

ஏற்காடு சட்டமன்ற தொகுதியில் டிசம்பர் 4ல் இடைத்தேர்தல்
    ற்காடு சட்டமன்ற தொகுதியில் வரும் டிசம்பர் 4ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மனுத்தாக்கல் நவம்பர் 9ஆம் தேதி தொடங்கி
16ஆம் தேதி வரை நடைபெறும். நவம்பர் 18ஆம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ்பெற நவம்பர் 20ஆம் தேதி கடைசி நாளாகும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன என்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் வெள்ளிக்கிழமை மாலை தெரிவித்தார்,

மத்தியப் பிரதேசம், சத்தீஷ்கர், டெல்லி, ராஜஸ்தான், மிசோரம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதியை வெளியிட்டபோது, ஏற்காடு தொகுதிக்கான இடைத்தேர்தலையும் தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் அறிவித்தார். 
கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஏற்காடு தொகுதியில் இருந்து அதிமுகவைச் சேர்ந்த பெருமாள் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஜூலை மாதம் அவர் மரணம் அடைந்ததால், இந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.