பக்கங்கள்

பக்கங்கள்

21 அக்., 2013

மாத்தறையில் ரணிலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு மோதிய 44 சந்தேகநபர்கள் அடையாள அணிவகுப்பில்
மாத்தறையில் ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு தரப்புக்கு இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 44 பேர், இன்று அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை இன்று இடம்பெற்றது.
சந்தேகநபர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில், குழுக்குழுவாக அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர உள்ளிட்ட மூன்று பேர், இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இன்று அடையாள அணிவகுப்பிற்கு கொண்டு செல்லப்;பட்ட அனைவரும் மங்கள சமரவீரவின் ஆதரவாளர்களாவர்.
அதேவேளை, இன்று காலை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின், தனிப்பட்ட செயலாளர் சுதத் சந்திரசேகர உள்ளிட்ட ஆறு பேரை, மாத்தறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று சரணடைந்தவர்களில் முன்னாள் பிரதி கல்வி அமைச்சர் சுரணிமல ராஜபக்சவும் உள்ளடங்குகிறார்.