பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2013

ரணிலுக்கு எதிரான பேரணி மீது மாத்தறையில் துப்பாக்கிச் சூடு 7 பேர் வைத்தியசாலையில்! மாகாணசபை உறுப்பினரின் தந்தை கைது
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியின் மீது மாத்தறையில் இன்று மதியம் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பேரணியை காண வீதிக்கு சென்றிருந்த மாத்தறை நகர சபையின் அதிகாரியான திலும் பத்மசிறி என்பவர் இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாத்தறை நகர சபைக்கு அருகில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் பொல்லுகளுடன் மறைந்திருந்த சிலர் மாகாண சபை உறுப்பினர் மைத்திரி குணரட்ன ஏற்பாடு செய்திருந்த பேரணி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அங்கிருந்தவர்களில் ஒருவரே துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் பொல்லுகளுடன் பேரணிகளுக்கு புகுந்த வன்முறையாளர்கள் கெட்ட வார்த்தைகளினால் திட்டி அதில் கலந்து கொண்டவர்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த மேலும் ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் தென்மாகாணசபையின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர் கிரிசாந்தவும் உள்ளடங்குகிறார்
இந்தநிலையில் மோதலின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக பேரணி நடத்திய மாகாணசபை உறுபபினர் மைத்திரி குணரட்னவின் தந்தை சேமன் குணரட்ன கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை அடுத்து முழு மாத்தறை நகரும் பதற்றமான நிலைமையில் காணப்படுகிறது. கலகத்தடுப்பு பொலிஸார் ஆயுதங்களுடன் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
பேரணியில் பிரசாரம் செய்தவாறு முன்னால் சென்ற வாகனத்தின் மீது வன்முறையாளர்கள் நடத்திய தாக்குதலில் வாகனம் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.