பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2013

புதிய கட்டடம் புதிய முதலமைச்சரால் திறந்து வைப்பு
யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம் இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.வடக்கு மாகாண சபைக்கென 450 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் புதிய கட்டடம் இன்றைய தினம் வைபவ ரீதியில் வடமாகாண
முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி ஆகியோர் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.
இதேவேளை வைத்திய செலவுக்காக உதவித் தொகையினைக் கோரியிருந்த 55 பேருக்கு காசோலையினையும் வழங்கி வைத்தனர்.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினாகளான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை காலை 9.30 மணிக்கு வடக்கு மாகாணசபையின் கன்னியமர்வுகள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.