பக்கங்கள்

பக்கங்கள்

13 அக்., 2013

சிவாஜிலிங்கம் உட்பட 9 உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பதவிப் பிரமாணம்

வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ்  உறுப்பினர்கள் முல்லைத்தீவில் பதவிப்
பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
இத் தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனியின் (சுலேஸ் அணி ) தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பபாணம் ரில்கோ விடுதியில் இன்ற பகல் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் ரொலோ அமைப்பின் ஆட்சிப் பீட உறுப்பினரும் வடமாக சபை உறுப்பினருமான எம்கே.சிவாஜிலிங்கம்  தமிழீழ மக்கள் விடுதலைக்கழகத்தின் தலைவரும் வடமாகாண உறுப்பினரமான தர்மலிங்கம் சித்தார்தன் ஆகீயோரும் கலந்து கொண்டார்கள்.