பக்கங்கள்

பக்கங்கள்

2 அக்., 2013

யாழ்.மாநகர சபையில் ஈ.பி.டி.பி யின் ஆட்சி மோசடிகள் நிறைந்ததே!- பகிரங்கமாக ஒப்புக் கொண்டார் மேயர்
ஈ.பி.டி.பி தலைமையிலான யாழ்.மாநகர சபையின் ஆட்சியானது ஊழல் மோசடிகள் நிறைந்தது என்பதை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவிலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனை பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
யாழ்.மாநகர சபையில் ஊழல் மோசடிகளிலும் நிர்வாக மோசடிகளிலும் ஈடுபட்டவர் ஈ.பி.டி.பி உறுப்பினர் விஜயகாந்த் ஆவார்.

அவர் கொலை மற்றும் கொள்ளைக் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளதோடு யாழ்.மாநகர சபையிலும் நிர்வாக மோசடிகளில் ஈடுபட்டுள்ளார்.
காசோலைகள் மோசடி செய்ததோடு பலரிடம் கப்பம் கோரியும் வந்துள்ளது தொடர்பாக ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.
அவருக்கு எதிராக உரிய நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம் யாழ்.மாநகர சபையில் எமது ஈ.பி.டி.பி யின் ஆட்சியானது மோசடிகள் நிறைந்தது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன் என்றார்.
இதேவேளை விஜயகாந்த் ஈ.பி.டி.பி யுடன் இணைந்திருந்த காலத்தில் அவரது நிர்வாக மோசடிகளை யாழ்.மாநகர மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கண்டு கொள்ளாமல் இருந்ததினால், ஈ.பி.டி.பி யினர் திட்டமிட்ட வகையிலேயே இதனை மேற்கொண்டனர் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.