பக்கங்கள்

பக்கங்கள்

1 அக்., 2013

சன் டிவிக்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கை

சன் டிவி அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக சன் டிவி மற்றும் பி.எஸ்.என்.எல்.க்கு எதிராக சிபிஐ முதல் தகவல் அறிக்கையை  தாக்கல் செய்துள்ளது.


அவ்வறிக்கையில், சன் டிவி உரிமையாளர் கலாநிதி மாறனின் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சன் டிவி அதிகாரிகளுடன் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களின் அதிகாரிகள் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்று சிபிஐ குற்றம்சாட்டியுள்ளது.