பக்கங்கள்

பக்கங்கள்

26 அக்., 2013


இராணுவமானது வட மாகாணத்தில் உடனேயே அதன் முகாம்களுக்கு முடக்கப்பட வேண்டும். மாகாணத்தின் வயது எய்திய குடிமக்கள் ஐவருக்கு ஒருவர் இராணுவ போர் வீரராக வலம் வரும்போது முறையான படைத்துறை சாராத குடிமக்கள் சார்ந்த நிர்வாகத்தை நாம் முன்நடத்த முடியாது. எமது மக்கள் எமது கட்சிக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கியதில் இருந்து இராணுவத்தைக் கட்டுப்படுத்தி படிப்படியாக வடமாகாணத்திலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற எங்கள் கொள்கைகளை அவர்கள் மனமார அங்கீரித்துள்ளமை புலனாகின்றது என வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம் கைதடியில் புதிதாக அமைக்கப்பட்ட வடக்கு மாகாண சபைக்கான கட்டடம் இன்று காலை 8 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. இதன்போதே உரையாற்றும் போதே சீ.வி. விக்னேஸ்வரன் இதனைத் தெரிவித்தார்.
 
படிப்படியான இராணுவ வெளியேற்றம் பற்றி அரசாங்கமும் கூறி வருவது மனமகிழ்வை ஏற்படுத்துகின்றது. உரிய பேச்சுவார்த்தையின் பின்னர் திடமான திட்டம் ஒன்றை இது சம்பந்தமாக வட மாகாண சபையினராகிய நாங்களும் அரசாங்கமும் தீட்ட வேண்டி வரும்.