பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2013

கொமன்வெல்த் மாநாடு குறித்து கூட்டமைப்புத் தலைவர்கள் ஆராய்வு

வடக்கு மாகாணசபை அதிகாரபூர்வமாகச் செயற்படத் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கொமன்வெல்த் மாநாடு தொடர்பாக கலந்துரையாடியுள்ளனர். 

நேற்றுமாலை யாழப்பாணத்தில் நடந்த கூட்டத்திலேயே இதுபற்றிக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிறேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், எம்.ஏ.சுமந்திரன், சரவணபவன், மாகாணசபை உறுப்பினர்களான சித்தார்த்தன், சிவாஜிலிங்கம் மற்றும் ராகவன், ஹென்றி மகேந்திரன் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கூட்டத்தை கொழும்பில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.