பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2013

பிரதமருக்கு எதிராக இலஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு!- ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள்
பிரதமர் டி.எம். ஜயரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய ஜனாதிபதிக்கு நெருக்கமான சட்டத்தரணிகள் சிலர் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரியவருகிறது.
கம்பளை அம்பலுவாவ சமய கலாசார மத்திய நிலையத்தை நிர்மாணிக்க கிடைத்த நிதியுதவி பிரதமரின் தனிப்பட்ட வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டது என்று குற்றம் சுமத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது.
இதற்கு தேவையான ஆவணங்கள் பாதுகாப்பு அதிகாரிகளினால் சம்பந்தப்பட்ட சட்டத்தரணிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
மத்திய மாகாண முதலமைச்சராக சரத் ஏக்கநாயக்க தன்னால் நியமிக்கப்பட்டதை எதிர்த்து பிரதமர் பேரணி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தமை தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மீது கடும் கோபம் கொண்டிருப்பதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.