பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2013

சென்னையில் பன்னா இஸ்மாயிலுக்கு சிகிச்சை: பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஆந்திர மாநிலம் புத்தூரில் தலைமறைவாக இருந்த தீவிரவாதிகளை போலீசார்  சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது
போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில், போலீசார் சுட்டதில், தீவிரவாதி பன்னா இஸ்மாயில் வயிற்றில் குண்டு பாய்ந்தது.

படுகாயமடைந்த பன்னா இஸ்மாயிலை, சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வாகனத்தில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு போலீசார் அழைத்து வந்தனர். படுகாயமடைந்த பன்னா இஸ்மாயிலுக்கு, தனி வார்ட்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.