பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2013

இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை பெண்ணொருவர் பலி

இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் பிரதேசத்தில் நேற்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
ஸ்பீட் வெல் மற்றும் மற்றும் பிரிக்பீல்ட்ஸ் வீதி சந்திக்கு அருகில் இந்த விபத்து நேற்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் இலங்கையில் பிறந்த 55 வயதான முத்துமனக்கா பின்ஹாமி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.

தொழில் செய்யும் இடத்தை நோக்கி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர்கள் கணவரும் பிள்ளைகளும் இலங்கையில் வாழ்ந்து வருவதாகவும் அவர் ஆடைத் தொழிற்சாலை ஒன்றின் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.