பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2013

ஐங்கரநேசனுக்கு அமைச்சுப்பதவி கொடுக்க வேண்டாம்: ஈ.பி.ஆர்.எல்.எப்/பிரேமச்சந்திரனின் சகோதரர் சர்வேஸ்வரனுக்கு வாங்கி கொடுக்கவே  விருப்பம் தெரிவிப்பு 
பொன்னுத்துரை ஐங்கரநேசனுக்கு வடமாகாண சபையில் அமைச்சர் பதவி கொடுக்க வேண்டாமென அவருடைய கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடத்திடம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடமாகாண சபை அமைச்சரவை விபரம் நேற்று மாலையில் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. அதில் பொன்னுத்துரை ஜங்கரநேசன் விவசாய அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியினர் அதற்கு இன்று எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக ஈ.பி.ஆர்.எல்.எப் பின் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமாகிய சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்டபோது,
ஐங்கரநேசன் அமைச்சராக தெரிவு செய்யப்பட்டது தமிழரசுக் கட்சியின் முடிவு மட்டுமே என்பதுடன், அது ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் சம்மதத்துடன் நடைபெறவில்லை எனவும் கூறினார்.
ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சி சார்பாக ஐங்கரநேசனே அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.