பக்கங்கள்

பக்கங்கள்

27 அக்., 2013

 நடிகைக்கு உதடு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது: நடிகருக்கு மனைவி உத்தரவு
 இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் தற்போது ‘பென்சில்’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் நடித்த ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். மணி நாகராஜ் இயக்குகிறார். 



கதாநாயகன் அவதாரம் எடுத்துள்ள ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகிக்கு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது என அவரது மனைவி சைந்தவி நிபந்தனை விதித்திருக்கிறாராம். இதுகுறித்து ஜீ.வி.பிரகாஷ் கூறும்போது,
‘பென்சில்’ படம் பள்ளி மாணவன் பற்றிய படம். இந்த படத்தின் கதை எனக்கு ஏற்ற விதத்தில் அமைந்ததால் நடிக்க ஒப்புக் கொண்டேன். கூத்துப்பட்டறையைச் சேர்ந்த பாபு மற்றும் ‘ஆடுகளம்’ நரேன் ஆகியோருடன் நடிப்பு பயிற்சி பெற்றுள்ளேன். நடிப்பதற்கு என் மனைவி சைந்தவி தடை ஏதும் சொல்லவில்லை.
ஆனால், எந்த நடிகையுடன் நடித்தாலும் உதடு முத்தம் கொடுத்து நடிக்கக்கூடாது. நெருக்கமான காட்சிகளில் நடிக்கக்கூடாது என நிபந்தனை விதித்திருக்கிறார். நான் நடிக்கும் படம் குடும்பத்தினருடன் அமர்ந்து பார்க்கும்படிதான் இருக்கும்’’என்று கூறியுள்ளார்.