பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2013


குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை: தொப்புள் கொடியுடன் போட்டு விட்டுச் சென்றது யார்?
அருப்புக்கோட்டை சாலியர் மாரியம்மன் கோயில் தெருவில் உள்ள குப்பைத் தொட்டி ஒன்றில் பச்சிளம் பெண் குழந்தை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதிகாலை 5 மணிக்கு யாரோ இந்த குழந்தையை
தொப்புள் கொடியுடன் போட்டு விட்டுச் சென்றுள்ளனர். குழந்தையின் அழுகை குரல் கேட்டு, அப்பகுதி பெண்கள் அக்குழந்தையை எடுத்து சுத்தம் செய்து பாதுகாத்துள்ளனர். பின்னர் 108 ஆம்புலன்சிற்கு தகவல் அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அக்குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

குப்பைத்தொட்டியில் குழந்தையை போட்டுச் சென்றது யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.