பக்கங்கள்

பக்கங்கள்

10 அக்., 2013

மட்டு.அமிர்தகழியில் 16 முதலைக் குட்டிகள் மீட்பு
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அமிர்தகழி பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றின் குழியொன்றுக்குள் இருந்து 16க்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.
அமிர்தகழி, ஸ்ரீமாணிக்கப் பிள்ளையார் ஆலய வீதியில் உள்ள மனோகரன் என்பவரின் வீட்டின் காணியில் இருந்தே இந்த முதலைக் குட்டிகள் மீட்கப்பட்டுள்ளன.

தமது காணிக்குள் துப்புரவு வேலைசெய்து கொண்டிருக்கும்போது முதலை குட்டி ஒன்றின் தலை தெரிவதைக்கண்டு அதனைத் தோண்டியபோது பத்துக்கும் மேற்பட்ட முதலைக் குட்டிகளையும் 15க்கும் மேற்பட்ட முட்டைகளையும் மீட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து முட்டைகளில் இருந்து முதலைக்குஞ்சுகள் வெளிவந்த நிலையில் 16க்கும் மேற்பட்ட முதலைக்குஞ்சுகள் உயிருடன் மீட்கப்பட்டதுடன் குஞ்சு பொரிக்கும் நிலையில் 09 முட்டைகள் உள்ளன.
இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மற்றும் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு வந்த திணைக்கள அதிகாரிகள் அவற்றினை கொண்டு சென்றுள்ளனர்.