பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2013

மன்னார் ரொலோ மாகாண சபை உறுப்பினர் கலந்து கொள்ளாமைக்கு காரணம் “விபத்து”: அரசியல் சாயல் இல்லை
வட மாகாண சபை உறுப்பினரும் வைத்தியருமான குணசீலன் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்குரிய காரணம் அவரது மனைவி எதிர்பாராத விதமாக விபத்திற்குள்ளாகியமையே
எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக மாகாண சபை உறுப்பினர் குணசீலன் ஆயத்தமான வேளையில் அவரது மனைவி எதிர்பாராத விதமாக விபத்திற்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் இந்நிகழ்வில் கலந்து கொள்ளமுடியாமல் போனதுடன் எமது உறுப்பினர் பதவியேற்பை தவிர்த்தமைக்கு எந்த வித அரசியல் காரணிகளும் இல்லை.
சில ஊடகங்கள் திரிபுபடுத்தி அரசியல் இலாபம் தேட முயற்சிப்பது எதிரியின் பலத்தை இன்னும் அதிகரிக்கச் செய்யும் என ரொலோ அமைப்பின் முக்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் உறுதிப்படுத்தினார்.