பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2013

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் ரத்து
சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் அனைத்தும் சனிக்கிழமை ரத்து செய்யப்பட்டன. தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் போராட்டம் நடைபெறுவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா சனிக்கிழமை தொடங்கியது. பேருந்து இயக்கப்படாததால் திருப்பதி திருமலையில் பிரம்மோற்சவத்துக்கு செல்லும் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆரம்பாக்கம் என்ற இடம்வரை மட்டும் தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன.