பக்கங்கள்

பக்கங்கள்

6 அக்., 2013

சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்கிக்கும் செருப்படி கொடுக்க இருக்கும் அனந்தி

தமிழின துரோகி சிங்க கொடி சம்பந்தனுக்கும் சிங்கள சம்பந்தி விக்னேஸ்வரனுக்கும் வடமாகாணசபை தேர்தலில் அதி கூடிய வாக்கு பெற்ற அனந்தி எழிலன் செருப்படி கொடுக்க உள்ளார்.  
 போர்க்குற்றவாளி மகிந்தன் முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவி பிரமாணம் எடுக்க இருப்பது பற்றி அனந்தியிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது மிகுந்த கோபத்துடன் காணப்பட்டார். தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காது போர்க்குற்றவாளியை காப்பாற்றுவதற்காக இந்த துரோகத்தனத்தை இவர்கள் செய்கிறார்களே என அவர் கவலைப்பட்டார்.
போர்க்குற்றவாளி மகிந்த ராசபக்ச முன்னிலையில் விக்னேஸ்வரன் பதவி பிரமாணம் செய்தால் தமிழனத்திற்கு துரோகத்தை செய்த விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன், சட்டத்தரணி ஒருவர் முன்னிலையில் பதவி பிரமாண ஆணையாளர் ஒருவர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொள்வேன்; என அனந்தி தெரிவித்தார்.
எதிர்வரும் 11ஆம் திகதி விக்னேஸ்வரன் முன்னிலையில் மாகாணசபை உறுப்பினர்கள் பதவி பிரமாணம் செய்ய உள்ளதாக அறிகிறேன்.  தன்மானம் ரோசம் தமிழின பற்று இருந்தால் அன்றைய தினம் விக்னேஸ்வரன் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்து கொள்ள கூடாது
இக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் அல்லது சட்டத்தரணி முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் தான் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் தமிழினத்திற்கு சம்பந்தனும் விக்னேஸ்வரனும் செய்த துரோகத்தனத்திற்கு கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை நாளை வெளியிட இருப்பதாகவும் யாழ்ப்பாணத்தில் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றை நடத்த இருப்பதாகவும் அனந்தி தெரிவித்தார்.