பக்கங்கள்

பக்கங்கள்

7 அக்., 2013

கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக இருந்து வரும் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு வலியுறுத்தும் இந்த தீர்மானம் கட்சியின் அதியுயர் பீடத்தில் எடுக்கப்பட உள்ளது.
முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினைக்கு அரசாங்கம் தீர்வு வழங்காத காரணத்தினால் அதற்கான யோசனை ஒன்றை கிழக்கு மாகாண சபையில் முன்வைக்க தீர்மானித்ததாக அந்த முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம் காங்கிரஸ் இரண்டு நகர சபைகளையும் 5 பிரதேச சபைகளையும் தனது ஆட்சியின் கீழ் கொண்டுள்ளதுடன் இந்த விடயம் தொடர்பாக அவற்றின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.