பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2013

தூத்துக்குடி: நடுக்கடலில் சிக்கிய மர்ம கப்பல்: கப்பலில் இருந்தவர்கள் எங்கே? ஆயுதங்கள் இருந்ததா?
இந்திய கடலோர காவல்படை வீரர்கள் தமிழக கடல் பகுதியில் ‘‘அபிநவ்’ ரோந்து கப்பலில் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது தூத்துக்குடி அருகே நடுக்கடலில் ஒரு பெரிய
கப்பல் கேட்பாறற்று நின்றது. இதனைப் பார்த்த கடலோர காவல்படையினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவர்கள் மைக் மூலம் பேசி யார் இருக்கிறீர்கள்? என்று கேட்டனர். ஆனால் அந்த கப்பலில் இருந்து யாரும் பேசவில்லை. இதனால் சந்தேகமடைந்த கடலோர காவல்படையினர் அந்த கப்பலை சுற்றி வளைத்தனர். பின்பு அந்த கப்பலுக்குள் அதிரடியாக சென்று பார்த்தனர். அப்போது அந்த கப்பலுக்குள் யாரும் இல்லை.
ஏற்கனவே தீவிரவாதிகள் நுழைய வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் தீவிரவாதிகள் யாரும் நுழைந்தார்களா? என்று அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனையடுத்து தூத்துக்குடி துறைமுகத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.
அந்த கப்பலில் ஏராளமான ஆயுதங்கள் இருப்பதாகவும், அந்த ஆயுதங்களை யாரோ மர்மநபர்கள் கடத்திச் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. 
ஆயுதங்களுடன் மர்ம கப்பல் சிக்கியதாக பரவிய தகவல் குறித்து கடலோர காவல்படையினரும் கேட்டால் அதுபற்றி கூற மறுக்கிறார்கள். மேலும் நடுக் கடலில் சிக்கிய அந்த கப்பலை கரைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது,