பக்கங்கள்

பக்கங்கள்

12 அக்., 2013

பொதுநலவாய மாநாட்டு காலத்தில் போராட்டம் நடத்தலாம்; அரசாங்கம் தெரிவிப்பு 
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டங்கள் நடாத்துவதற்கு எவ்வித தடையும் கிடையாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளின் போது போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படக் கூடாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என்ற தகவல்கள் போலியானவை என ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பேச்சாளர் அனுராத ஹேரத் தெரிவித்துள்ளார்.


எனினும், இவ்வாறான எந்தவிதமான ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.