பக்கங்கள்

பக்கங்கள்

30 அக்., 2013

பொதுநலவாய மாநாடு ; தீவிர ஆலோசனையில் மன்மோகன் 
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங்  தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.


இதனிடையே மாநாட்டை இந்தியா புறக்கணித்தால் சீனா, பாகிஸ்தான் உடனான நட்பை இலங்கை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பது குறித்து அரசியல் ஆலோசர்களுடன் பிரதமர் மன்மோகன் சிங் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்கக்கூடாது என வலியுறுத்தி தமிழக அரசு மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஆர்ப்பாட்டங்நளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.