பக்கங்கள்

பக்கங்கள்

22 அக்., 2013

தமிழர்களுக்கு ராஜபக்ச அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை: சம்பந்தன் குற்றச்சாட்டு/ விகடன் 

ஈழத் தமிழர்களுக்காக இலங்கை அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தன் குற்றம்சாட்டினார்
சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தபோது இவ்வாறு கூறினார்.
இலங்கை தமிழர்களின் பிரச்rpனையை தீர்க்க இந்தியா தொடர்ந்து உதவ வேண்டும் என்றும் சம்பந்தன் கேட்டுக் கொண்டார்.
இந்தியாவால் 13வது சட்டதிருத்தத்தில் மாற்றம் செய்யும் முயற்சி தடுக்கப்பட்டுள்ளது என்று கூறிய சம்பந்தன், 13வது சட்டத்திருத்த விவகாரத்தை இலங்கை அரசு முற்றிலுமாக கைவிடவில்லை என்றார்.
மேலும், ஈழத் தமிழர்களுக்காக இந்தியா செய்யும் உதவிகள் முழுமையாக சென்றடையவில்லை என்று குற்றம்சாட்டிய அவர், இலங்கை அரசு ஆக்கபூர்வமாக எதையும் செய்யவில்லை என்றார்.
கொமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.