பக்கங்கள்

பக்கங்கள்

25 அக்., 2013

இலங்கைக்கு எதிரான தூக்கு மேடை நிர்மாணிக்கப்படும் சத்தம் கேட்கிறது: தயான் ஜயதிலக்க
நாட்டின் தலைவருக்கும், முப்படையினருக்கும், இறையாண்மைக்கும், சுயாதீனத்திற்கும் எதிராக தூக்கு மேடை நிர்மாணிக்கும் சத்தம் கேட்பதாக ராஜதந்திரியும் ஜெனிவாவுக்கான இலங்கையின் முன்னாள் நிரந்தர பிரதிநிதியுமான தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்தெரிவிக்கையில்,
இலங்கையின் சர்வதேச அரசியலை எடுத்து கொண்டால்,அது மிகவும் ஆபத்தான நிலைமையிலேயே இருப்பதாக எனக்கு தெரிகின்றது.
அரசாங்கத்தின் எண்ணத்திற்கு அமைய பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் மாநாட்டை நடத்துவதன் மூலமும் அதன் தலைமைத்துவதை ஏற்பதன் மூலமும் பாரியளவான வெற்றி கிடைக்கும் என நம்புகிறேன்.
எனினும் இது அறைகுறையானது என்பது மட்டுமே உண்மை. பொதுநலவாயத்தின் தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைப்பது நன்மையான விடயம்.
சர்வதேச ஈழவாத அமைப்புகள் இலங்கையை தனிமைப்படுத்த முயற்சித்து வரும் வேளையில், பல நாடுகள் இலங்கைக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு இலங்கையின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளமை சாதகமான விடயமாகும்.
எனினும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக பாரிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட வாய்ப்புள்ளது.
மாநாடு நெருங்கும் தருவாயில் சர்வதேச ஊடகங்கள் இலங்கைக்கு எதிராக மேலும் ஆழமான விமர்சனங்களை முன்வைக்கக் கூடும். இவை அனைத்தும் மாநாட்டை விட அடுத்த முக்கியமான சம்பவம் ஒன்றுக்கான அழுத்தங்களை ஏற்படுத்தும்.
2014 ஆம் ஆண்டு ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் எடுக்கப்பட உள்ள தீர்மானம் தொடர்பில் இது அழுத்தங்களை ஏற்படுத்தும்.
போர் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற யோசனை 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முன்வைக்கப்படக் கூடிய சிறந்த சந்தர்ப்பம் உள்ளது. இது எவ்வாறான தோற்றப்பாட்டை ஏற்படுத்தும் என்பதை முன்க்கூட்டியே கணிக்க முடியாது.
சர்வதேச விசாரணை நடத்துதல், இலங்கையின் போர் சம்பந்தமாக விசேட பிரதிநிதியை நியமித்தல் அல்லது ஆணைக்குழு ஒன்றை நியமித்தல் போன்ற யோசனை ஒன்று கட்டாயம் ஜெனிவாவில் முன்வைக்கப்படலாம் என்றார்.