பக்கங்கள்

பக்கங்கள்

23 அக்., 2013

சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் ஆண்டுவிழா

தமிழர் தாயகத்தில் வாழும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் சுவிட்சர்லாந்து நலிவடைந்தோர் உதவிச் சங்கத்தின் முதலாவது ஆண்டுவிழா அண்மையில் பேர்ண்- ஒஸ்ரர்முண்டிகன் நகரில் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் க.மகாலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வினை பேர்ண் ஞானலி
ங்கேஸ்வரர் ஆலய குரு சசிக்குமார் அவர்கள் மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.
நிகழ்விலே சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு இணைப்பாளர் கொலம்பஸ், தமிழ்க் கல்விச் சேவைத் தலைவர் சு. உதயபாரதிலிங்கம், ஒஸ்ரர்முண்டிகன் தமிழர் பாடசாலைச் சங்கச் செயலாளர் க. சண்முகானந்தன், பேர்ண் வள்ளுவன் பாடசாலை முதல்வர் பொ. முருகவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
கடந்தாண்டு ஆரம்பிக்கப்பட்ட நலிவடைந்தோர் உதவிச் சங்கம் இதுவரை தாயகத்தின் பல மாவட்டங்களிலும் வாழும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பலருக்கும் சுயதொழில் உதவிகளையும், பாடசாலைப் பிள்ளைகளுக்கான ஊக்குவிப்பு உதவிகளையும் வழங்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.