பக்கங்கள்

பக்கங்கள்

14 அக்., 2013

UNP யின் ஒற்றுமையை ஏற்படுத்த பொருத்தமானவர் விக்னேஸ்வரனே! - அஸ்வர் எம்.பி. புகழாரம் 
ஐக்கியம் சீர் குலைந்து பொல்லுகளுடனும் தடிகளுடனும் கற்களுடனும் திரியும் ஐக்கிய தேசி யக் கட்சியில் சமாதானத்தை ஏற்படுத்த பொருத்தமானவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனே, என ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரன் அலரிமாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணத்தை மேற்கொண்டு சமாதான தூதை ஏற்படுத்தியுள்ளார்.தற்போது யாழ்ப்பாணம் சென்று அமைதிப் பணி முயற்சிகளில்  ஈடுபட்டு வருகின்றார் என்றார்.
 
ஸ்ரீகொத்தாவில் சமாதானத்தை ஏற்படுத்த மிகவும் பொருத்தமானவர் விக்னேஸ்வரனேஎன்று கோப் அறிக்கை மீதான விவாதம் இடம்பெற்ற போது அவர் தெரிவித்தார்.