பக்கங்கள்

பக்கங்கள்

27 நவ., 2013

சுவிஸின் பாசல் கழகம் பலம் மிக்க செல்சீயை இரண்டாவது முறையாகவும் வென்று சாதனை 
இன்றைய  பரபரப்பான ஐரோப்பிய சாம்பியன் லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தின் பல மில்லியன் பெறுமதி மிக்க பெரிய கழகமான செல்சீயை சுவிசின் எப் சி பாசல் கழகம் 1-0 என்ற ரீதியில் வென்று வரலாறு படைத்துள்ளது .முதல் விளையாடடிலும் செல்சீ மைதானத்தில் வைத்தே 2-1 என்ற ரீதியில் வென்றிருந்த பாசல் இன்றும் இரண்டாவது வெற்றியை பெற்றுள்ளது ஒரு சாதனையாகும் முதல் பா தி வேளையில் தனது அதி உச்ச திறமையை காடடிய பாசல் இரண்டாம் பாதி வேளையில் சற்று குறைந்து பின்னர் இறுதி நேர விடாமுயற்சியில் சலா  அடித்த அற்புதமான கோலின் முன்னே  சாதனை பந்துக் காப்பாளரான செக் கொட்டை விட்டார் . செல்சீ 2011இல் சாம்பியன் லீக் கிண்ணத்தை பேரன் மியூனிச்சை  எதிர்த்தாடி வென்றமை குறிப்பிடத் தக்கது