பக்கங்கள்

பக்கங்கள்

14 நவ., 2013

 ரஜினியின் ‘கோச்சடையான்’ ஜனவரி 10ம் தேதி ரிலீஸ்
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10 ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இப்படம் மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். தீபிகா படுகோனே நாயகியாக நடித்துள்ளார். சரத்குமார், நாசர், ஆதி, ஷோபனா போன்றோரும் உள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கி உள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் ரஜினி பிறந்த நாளான டிசம்பர் 12–ந்தேதி வெளியிடப்படுகிறது. பொங்கலுக்கு விஜய்யின் ‘ஜில்லா’, அஜீத்தின் ‘வீரம்’ படங்கள் ரிலீசாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. தற் போது இப்படங்களுடன் ‘கோச்சடையானும்’ மோதுகிறது