பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2013

இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் 12 சாட்சியாளர்கள்!
பிரித்தானிய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்க திட்டமிட்டுள்ள இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் தொடர்பில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு 12 சாட்சியாளர்களை பிரித்தானிய அதிகாரிகளிடம் நேர்நிறுத்தியுள்ளதாக தெரியவருகிறது.
இவர்கள் இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு புகலிடம் கோரி சென்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
வன்னியில் இடம்பெற்ற மோதல்களின் போது தாம் வன்னியில் இருந்ததாக இந்த சாட்சியாளர்கள் சத்தியக்கடிதங்களை சமர்ப்பித்துள்ளதாக லண்டன் தகவல்கள் தெரிவித்தன.
தாம் நேரில் பார்த்தவற்றை பிரித்தானிய பிரதமர் கமரூனிடம் கூறவுள்ளதாக இவர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இனப்படுகொலைகளுக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு போலியான 12 சாட்சியாளர்களை நேர்நிலைப்படுத்தியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இவர்கள் போர் நடைபெற்ற போது இலங்கையில் இருந்து பிரித்தானியாவுக்கு தப்பிச் சென்றவர்கள் என்றும் அந்த பத்திரிகை கூறியுள்ளது.