பக்கங்கள்

பக்கங்கள்

17 நவ., 2013

கறுப்புப் பட்டியலில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்
இந்த ஆண்டின் முதல் பத்து மாதங்களில் 300 வெளிநாட்டுப் பிரஜைகள் கறுப்புப் பட்டியலிடப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
சுற்றுலா வீசா மூலம் நாட்டுக்குள் பிரவேசித்தவர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்திய மற்றும் பாகிஸ்தானியர்களே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
வீசா சட்டங்களை மீறி இலங்கையில் தொழில்களில் ஈடுபட்ட பலர் இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
குடிவரவு குடியகல்வுத் திணைக்கள புலனாய்வுப் பிரிவினர் நடத்திய தேடுதல்களின் மூலம் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டிருந்தனர்.