பக்கங்கள்

பக்கங்கள்

8 நவ., 2013

பொதுநலவாய மாநாட்டை புறக்கணிக்க வலியுறுத்தி மதுரை விமான நிலையத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாம் தமிழர் கட்சியின் மாவட்ட செயலாளர் செந்தில் தலைமையில் சுமார் 30 பேர், நேற்று காலை 10.30 மணியளவில் மதுரை விமான நிலையத்தை நோக்கி புறப்பட்டு வந்தனர். அப்போது, பெருங்குடியில் நின்ற பொலிஸார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர்.


இதனைத்தொடர்ந்து, அங்கிருந்தபடியே அனைவரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி, இலங்கை ஜனாதிபதி ஆகியோரது உருவப் படங்களை தூக்கிலிட்டு பெற்றோல் ஊற்றி எரிக்க முயன்றனர். 
ஆனால், அவர்களை பொலிஸார் தடுத்தி நிறுத்தினர். இதனிடையே, நாம் தமிழர் கட்சியினர் இலங்கையின் தேசியக் கொடியை தீ வைத்து எரித்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நாம் தமிழர் கட்சியை சேர்ந்த செந்தில் உட்பட 30 பேரையும் பொலிஸார் கைது செய்‌தனர்.