பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2013

கொலை, வழிப்பறி, பலாத்காரம்: 38 ரவுடிகளை கைது செய்து விசாரணை
 

தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொலை, வழிப்பறி, பலாத்காரம் என கொடூரமான சம்பவங்கள் நடந்து வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் பெருத்த
அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்கு ஏதுவாக மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு காவல்நிலையங்களிலும் உள்ள ரவுடிகளின் பட்டியலை தயார் செய்து விசாரிக்க உத்தரவிட்டார் தஞ்சை எஸ்.பி தர்மராஜன். அதன்பேரில் செவ்வாய்க்கிழமை காலை கும்பகோணம், பாபநாசம், அம்மாபேட்டை, தஞ்சாவூர், திருவையாறு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களில் உள்ள 38 ரவுடிகளை கைது செய்து விசாரித்த பின் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.