பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2013

சவேந்திர சில்வாவுடனான விவாதத்துக்கு எந்த நேரத்திலும் தயார்: கலும் மக்ரே
சனல்4 விவரண தயாரிப்பாளர் கலம் மெக்ரேயுடன் விவாதத்துக்கு தாம் தயார் என்று ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் கலும் மெக்ரே தயாரித்துள்ள விவரணப்படங்கள் தொடர்பிலேயே சவேந்திர சில்வா இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
ஏற்கனவே சனல்4 விவரணம் நியூயோக்கில் வெளியிடப்பட்ட போது, அதில் 7 நிமிடங்கள் வரை உரையாற்றுமாறு ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி பாலித கோஹனவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. எனினும் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த நிகழ்வுக்கு சவேந்திர சில்வாவே பொருத்தமானவர் என்று கோஹன குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே சவேந்திர சில்வா தற்போது மெக்ரேயுடன் விவாதத்தை கோரியுள்ளார்.
இந்த விவாதத்தை ஏற்றுக்கொண்டுள்ள மெக்ரே, அதற்காக நியூயோர்க் செல்வதற்கு தம்மிடம் நிதி வசதியில்லை என்று குறிப்பிட்டுள்ளார். எனினும் எந்த நேரத்திலும் விவாதத்துக்கு தாம் தயார் என்று மெக்ரே தெரிவித்துள்ளார்.