பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2013

இலங்கை மிகப் பெரிய மயான பூமி!- சனல் 4 ஊடகம்!- பிரி. பிரதமருக்கு நிகராக சனல் 4 ஐ நம்பும் யாழ்.மக்கள்
இலங்கை மிகப் பெரிய மயான பூமி என சனல் 4 தொலைக்காட்சி நேற்றிரவு பிரசாரங்களை ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
இந்த மயான பூமியில் விடுமுறையை கழிப்பதை தவிர்த்து கொள்ளுமாறு அந்த தொலைக்காட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர் கெலும் மக்ரே உட்பட அவரது குழுவினருக்கு வட பகுதிக்கு செல்ல இடமளிக்காததால் அந்த தொலைக்காட்சி இப்படியான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை வட பகுதிக்கு சென்ற பிரித்தானியாவின் ஐ.ரி.வி. தொலைக்காட்சி கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதாக அறிக்கையொன்றை ஒளிப்பரப்பியுள்ளது.