பக்கங்கள்

பக்கங்கள்

4 நவ., 2013

சூதாட்டத்தில் வென்ற பணத்தை பாலியல் தொழிலாளியிடம் பறிகொடுத்த கொரியப் பிரஜை
கொரியப் பிரஜை ஒருவர், கொழும்பிலுள்ள சூதாட்ட நிலையத்தில் வென்ற 5,10,000 ரூபாய் பணத்தை இலங்கை பாலியல் பெண் தொழிலாளியிடம் பறிகொடுத்தமை தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 27 ஆம் திகதி சூதாட்டத்தில் வெற்றி பெற்ற 5,10,000 ரூபாவுடன் பெண்ணொருவரை அழைத்துக்கொண்டு அதிகாலை 2.30 மணியளவில் ஹோட்டலுக்கு திரும்பியுள்ளார்.
தான் மதுபோதையில் ஆழ்ந்த நித்திரையில் இருந்த சமயம் தான் சூதாட்டத்தில் வென்ற பணத்துடன், தன்னிடமிருந்த பணத்தையும் எடுத்துக்கொண்டு குறித்த பெண் தலைமறைவாகிவிட்டதாக கொரிய பிரஜை கொம்பனி வீதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான அறிக்கையை கொழும்பு கோட்டை நீதிமன்றில் நேற்று தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்த கொம்பனி வீதி பொலிஸார்,  ஹோட்டல் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ள ஒளிப்பதிவு ஆதாரத்துடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.