பக்கங்கள்

பக்கங்கள்

26 நவ., 2013

தமிழீழத் தேசியத்தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சென்னை மாணவர்கள்!



 
 தமிழீழ தேசிய் தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாளினை தமிழர்கள் அனைவரும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இன்று சென்னை பல்கலைக்கழகத்தின் விடுதியில் மாணவர்கள் கேக் வெட்டி மாணவர்களுடன் பரிமாறி கொண்டாடியுள்ளார்கள்.

புலம்பெயர் தமிழர்களும், தமிழகத்திலும் பரவலாக தேசியத் தலைவர் அவர்களின் பிறந்த நாள் எழுச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் 26.11.2013 இன்று 12 மணிக்கு தேசியத் தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி கொண்டாடினர். அவரின் வயதுக்கு அளவான எண்ணிக்கையில் தின் பண்டங்களும் நிகழ்வில் பகிரப்பட்டன.
தமிழ்நாட்டில் மாணவர்கள் தங்கள் தங்கியுள்ள இடங்கில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுளார்கள்



சென்னை ராயப்பேட்டையில் தலைவர் அவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டம்
சென்னையின் ராயப்பேட்டையில் தமிழ் இளைஞர்கள் தலைவர் அவர்களின் பிறந்தநாளினை கொண்டாடியுள்ளார்கள்.பெருந்திரளான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைவர் அவர்களின் 59 ஆவது பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
தலைவன் பேர் முழங்க, புலிகள் புகழ்பாட, பெரும் வெடி சத்தத்துடன்' , 500 இளைஞர்களின் கைதட்டலில் அதிர்ந்தது ராயப்பேட்டை.