பக்கங்கள்

பக்கங்கள்

12 நவ., 2013

தமிழக சட்டப்பேரவையின் அவசரக் கூட்டம்: காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு
தமிழக சட்டமன்றப் பேரவையின் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு, தலைமைச் செயலக சட்டப்பேரவை மன்ற மண்டபத்தில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், காமன்வெல்த்
மாநாட்டை இந்தியா முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். பெயரளவில் கூட இந்தியா காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்ற அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல் அமைச்சர் ஜெயலலிதா

இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டு பேசினர். இந்த தீர்மானத்தின் மீது பேசிய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், பிரதமர் குறித்து தெரிவித்த கருத்தை நீக்க வேண்டும் என காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். 
காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச பின்னர் வாய்ப்பு தரப்படும் என சபாநாயகர் தனபால் கூறினார். இதனை ஏற்காமல் காங்கிரஸ் உறுப்பினர்கள் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.